தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.
X
திருவாரூரில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் கருப்பு சட்டையணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுவிநியோகத் திட்டத்திற்கு தனி துறை ஏற்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும், கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.
Next Story