டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பியை திருடிய மர்ம நபர்கள்.

டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பியை திருடிய மர்ம நபர்கள்.
X
திருவாரூர் அருகே மின் டிரான்ஸ்பார்மரில் இருந்த காப்பரை திருடிய மர்ம நபர்கள். மின்சாரம் இன்றி பருத்தி பயிர் கருகும் நிலையில் விவசாயிகள் வேதனை உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
திருவாரூர் அருகே பழையவலம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. அதே கிராமத்தில் சேனாவதி வாய்க்கால் பாசனம் பகுதியில் உள்ள விளைநிலத்தில் பருத்தி பயிரிட்டுள்ளார். இவருக்கு அங்குள்ள மின்கம்பத்திலிருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து மர்மநபர்கள் சேதப்படுத்தி அதிலிருந்த காப்பர் காயிலை திருடிச்சென்றுள்ளனர். இதனால் மின் விநியோகதடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின் வாரியம் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்ச வழியின்றி உள்ளது. தண்ணீரைக்காணாத பருத்தி செடிகள் வாடி வருகின்றன. ஏற்கனவே, வறட்சி், மழை ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பருத்தி மறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரான்ஸ்பார்மர் திருட்டால் தண்ணீரின்றி பருத்தி செடிகள் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Next Story