திருவாரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது, மாநில அரசின் ஆலோசனைபடியே செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மசோதாக்கள் மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் என்றும், பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என தமிழக அரசு தொடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் தேவா ,கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சேகர் என்கிற கலியபெருமாள் நகர மன்ற தலைவர்கள் புவனபிரிய செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்..
Next Story



