பணி நியமன ஆணைகள் வழங்கி ஆட்சியர்.

பணி நியமன ஆணைகள் வழங்கி ஆட்சியர்.
X
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-IV தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் வழங்கினார்கள்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-IV தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் பதவிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-IV (தொகுதி IV)க்கான தேர்வு 09.06.2024 நடைபெற்றதில், தேர்வில் வெற்றி பெற்று திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III நிலையில் பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
Next Story