கிருஷ்ணகிரி: வெள்ளை ஈக்கள் கட்டுபடுத்த விழிப்புணர்வு.

கிருஷ்ணகிரி: வெள்ளை ஈக்கள் கட்டுபடுத்த விழிப்புணர்வு.
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை விழிப்புணர்வு முகாம் தென்னை விவசாயிகளுக்கு, போச்சம்பள்ளி அடுத்த, கோட்டப்பட்டியில் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அஜிலா, பையூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியை சுதமதி, உதவி பேராசிரியர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தென்னை விவசாயிகளிடையே தென்னையில் பூச்சி தாக்குதல்களிலிருந்து தென்னையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து தென்னை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறனர். இதில்அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தலைவர் கென்னடி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story