ராமநாதபுரம் அதிமுக கட்சியின் வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் அதிமுக கட்சியின் வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
X
சாயல்குடி பகுதியில் அதிமுக கட்சியின் வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி கிழக்கு ஒன்றியம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாரியூர், கிழக்கிடாரம், மேலக் கிடாரம், வாலிநோக்கம், தனிச்சியம், கொத்தங்குளம், சிறை குளம், சிக்கல், இதம் பாடல் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், வாக்குச்சாவடி ஒன்றிய பொறுப்பாளர்கள் குமரய்யா தேவர், சண்முக பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பிரவீன் குமார் வரவேற்றார். ஊராட்சி வாரியாக நடைபெற்ற கூட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர் சுதா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி வாரியாக வாக்குச்சாவடி கிளை அமைத்தல், இளம் தலைமுறையினரை உறுப்பினராக சேர்க்க கிராமங்களில் விளையாட்டு வீரர் அணி உருவாக்குதல் மற்றும் இளம் பெண், இளைஞர் உறுப்பினர் சேர்த்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு சேகரிக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story