ராமநாதபுரம் பங்குனி பொங்கல் முளைப்பாரி பால்குடம் வேண்டுதல் நடைபெற்றது

வாழ வந்தாள் அம்மன் கோயில் பங்குனி பொங்கல் முளைப்பாரி விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பால்குடம் ,அக்னிசட்டி, அலகு குத்தி வேண்டுதல் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ வாழவந்தாள் அம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு அப்பகுதி பெண்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். தினந்தோறும் இரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை ,பெண்கள் கும்மி அடித்தும்,ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். விளங்குளத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழ்நிலையில் அனைவரும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டதால் விவசாயம் செழிக்கவும், பருவ மழை பெய்ய வேண்டியும், உடல் நலம் பெற வேண்டியும் ஆண்கள், மற்றும் பெண்கள் சுப்பிரமணியபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் பக்தி பரவசத்துடன் அக்னி சட்டியைக் கையில் ஏந்தியும் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக வாழவந்தாள் அம்மன் கோவிலை வந்தடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பின்னர் பால் ,சந்தனம் ,தயிர் திரவியம், உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.
Next Story