தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்

X

திண்டுக்கல்லில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திண்டுக்கல் பள்ளிக்கல்வித்துறை இணைந்து தாமரைப்பாடி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட கல்வி அலுவலர் வெற்றி செல்வி வரவேற்பு உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது 9 மாணவர்கள் உடனடியாக தாமரைப்பாடி நடுநிலை பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story