சேலம் அஸ்தம்பட்டியில் தாலுகா அலுவலகத்தில்

சேலம் அஸ்தம்பட்டியில் தாலுகா அலுவலகத்தில்
X
பொதுமக்கள் நேற்று இரவு தர்ணா
சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூர் அருகே உள்ள கருப்பக்கவுண்டர் காடுபகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் நேற்று இரவு சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அலுவலகத்திற்குள் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும் போது,‘ பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது தனியாரால் நடைபாதையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே நடைபாதை தடுப்பை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன்பேரில் அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.
Next Story