பாலத்தில் மோதிய அரசு பேருந்து

மதுரை அவனியாபுரத்தில் அரசு பேருந்து பாலத்தில் மோதி நின்றது.
மதுரை அவனியாபுரத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி இன்று (ஏப்.9) வந்து கொண்டிருந்த நகரப் பேருந்து அவனியாபுரம் அருகே உள்ள ரொட்டி கம்பெனி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க பேருந்தினை திருப்பிய போது அங்கிருந்த சிறிய பாலத்தில் பேருந்து மோதி நின்றது .நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து மற்றும் மின்கம்பம் சேதமடைந்தது. இது குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story