நாளை மகாவீர் ஜெயந்தி:மாவட்டம் முழுவதும் இறைச்சி கடைகளை மூட வேண்டும்

நாளை மகாவீர் ஜெயந்தி:மாவட்டம் முழுவதும் இறைச்சி கடைகளை மூட வேண்டும்
X
கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவு
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மகாவீர் ஜெயந்தி விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள மீன் கடைகள், ஆடு, கோழிக்கறி உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகளும் மூட வேண்டும். மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story