பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷன் சங்க கூட்டத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

X
அரியலூர், ஏப்.9- அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டமைப்பின் கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் வட்டத் தலைவர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக துணைத் தலைவர் ராமசாமி வரவேற்று பேசினார்.செயலாளர்கள் கலியமூர்த்தி அறிக்கையினை வாசித்தார் பொருளாளர் ராமமூர்த்தி வரவு செலவினை வாசித்தார்.கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலம் அதிகாரி எழிலன் மற்றும் எக்விடாஸ் வங்கி அலுவலர்கள் பங்கேற்று தங்களின் சேவைகளை பற்றி விளக்கினர்..தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலில் வாக்களித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் பொன்னேரி என்கின்ற சோழங்கத்தை மேம்படுத்தி சுற்றுலா மையமாக வேண்டும் சிதம்பரம் டு ஜெயங்கொண்டம் அரியலூர் மற்றும் கும்பகோணம் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் ரயில் பாதை ஏற்படுத்தி ஜெயங்கொண்ட மக்களின் 50 ஆண்டு கால கனவை நினைவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வெளிப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் நிர்வாகி ராசகோபாலன் நன்றி கூறினார்.
Next Story

