தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்த இருவர்: ஒருவர் கைது
திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்து ₹. 4 லட்சத்து 33 ஆயிரம் மோசடி 2 பேர் மீது போலீசில் கொடுத்த புகாரில் ஒருவர் கைது - உடன் வந்த மற்ற அரக்கோணத்தைச் சேர்ந்த ஜான் உள்ளிட்ட இருவரை ருவள்ளூர் நகர காவல் துறையினர் வலைவீசி மேற்கொண்டுள்ளனர் திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் செயல்பட்டு வரும் முத்தூட் ஃபின்கார்ப் கிளை நிதி நிறுவனத்தில் தங்கத்திற்கு கடன் வழங்கி வருகின்றனர் அங்கு பணியில் இருந்த சங்கரி (44) என்பவரிடம . கடந்த 19-ஆம் மதியம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் (34) மற்றும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஜான் ஆகியோருடன் மற்றொருவரும் என 3 பேர் வந்துள்ளனர். அப்போது விஜயகுமார் பெயரில் 1 செயின், 3 வளையல்கள், என மொத்தம் 82.1 கிராம் எடையுள்ள நகைகளை அடமானம் வைத்து ரூ.4 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை வங்கி கணக்கு மூலம் பெற்றுச் சென்றுள்ளனர். அதனையடுத்து கடந்த 27.3.2025 அன்று முத்தூட் ஃபின்கார்ப் தலைமை அலுவலகத்தில் இருந்து தங்க நகை பரிசோதிப்பாளர் விக்னேஷ் பிரபு என்பவர் மேற்படி நகைகளை சோதனை செய்த போது விஜயகுமார் என்பவர் பெயரில் வைத்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்று தெரியவந்தது. இதனையடுத்து திருவள்ளூர் கிளை மேலாளர் சங்கரி திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் போலி நகைகளை கொடுத்து ரூ.4 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்த விஜயகுமார் மற்றும் ஜான் ஆகியோர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராணிப்பேட்டையை சேர்ந்த விஜயகுமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜான் என்பவரையும் அவருடன் வந்த மற்றொரு நபர் யார் என்றும் திருவள்ளூர் நகர போலீசார் தேடி வருகின்றனர்
Next Story








