அரியலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் மனைவியை கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு*

X
அரியலூர், ஏப்.9- பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனது மனைவி ராணியுடன் அரியலூர் அருகேயுள்ள பாலம்பாடி கிராமத்தில் வசித்து வந்துள்ளார். மூர்த்தி ஆடுகளை மேய்ப்பதற்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்போது அங்கு சம்பாதித்த பணத்தை ராணி வாங்கிய குழு கடனை அடைக்க சொல்லி கொடுத்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த மூர்த்திக்கு ராணியிடம் குழு கடனை அடைக்க சொல்லிக் கொடுத்த பணத்தை குழு கடனை அடைக்காமல் இருந்தது தெரிய வந்தது இதனால் மூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் மூர்த்திக்கு தனது மனைவி ராணியின் மீது தகாத உறவு வைத்துள்ளதாக சந்தேகமும் ஏற்பட்டுள்ளது இதனால் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் ராணி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14.12.2023 அன்று மூர்த்தி தனது மனைவி ராணியை போனில் பேசி வீட்டிற்கு அழைத்துள்ளார் வீட்டிற்கு வந்த ராணியிடம் மூர்த்தி பாலம்பாடி வஞ்சித்து ஓடை அருகே தான் ஆட்டுக்கிடாய் வைத்திருப்பதாக கூறி அழைத்துச் சென்று அருகில் இருந்த கருவேல காட்டில் ராணியை தாக்கி கொலை செய்துள்ளார். இது குறித்து அரியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இது குறித்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா மனைவியை கொலை செய்த மூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story

