சமரச தினத்தை முன்னிட்டு:சட்டக் கல்லூரி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி

சமரச தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையம் சார்பில் நடைபெற்றது
திருவள்ளூர்: சமரசதினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையம் சார்பில் நடைபெற்றது திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச நாளை முன்னிட்டு வழக்குகளில் சமரசத் தீர்வு காண வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார் லோக் ஆயுக்தா மக்கள் நீதி மன்ற செயலாளர் நளினி தேவி திருவள்ளூர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவ மாணவியர்கள் காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணியில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1164 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 169 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது இந்த ஆண்டு இதுவரை 465 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 57 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது நீதிமன்றங்களில் பள்ளிப்பட்டு ஊத்துக்கோட்டை மாதவரம் கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு நீதிமன்றங்களை தவிர்த்து மீதம் உள்ள பூவிருந்தவல்லி திருவள்ளூர் அம்பத்தூர் பொன்னேரி திருத்தணி ஆகிய ஐந்து நீதிமன்றங்களில் சமரசத் தீர்வு மையம் மூலம் 49 சமரசர்களைக் கொண்டு வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டு வருவதாக நீதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story