மலையராமபுரத்தில் சாலையை சீரமைக்கும் பணி இன்று நடைபெற்றது

மலையராமபுரத்தில் சாலையை சீரமைக்கும் பணி இன்று நடைபெற்றது
X
சாலையை சீரமைக்கும் பணி இன்று நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள பாவூர்சத்திரம் மேம்பால பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் அனைத்தும் மலையராமபுரம், ஆரியங்காவூர் செல்லும் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த சாலையானது மிகவும் குண்டு குழியுமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு சிரமமாக இருந்தது. இதனால் மலையராமபுரத்திலிருந்து செல்வ விநாயகர் புரம் வரை செல்லும் சாலையில் குழிகளை சரண் மண்ணடித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story