இலஞ்சிமில் குப்பைத்தொட்டி இல்லாமல் சிதறி காணப்படும் குப்பைகள்

இலஞ்சிமில் குப்பைத்தொட்டி இல்லாமல் சிதறி காணப்படும் குப்பைகள்
X
குப்பைத்தொட்டி இல்லாமல் சிதறி காணப்படும் குப்பைகள்
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் தெரு கடைசி பகுதியில் குப்பைத் தொட்டி வைக்கப்படாத நிலையில் அவ்வழியில் குப்பைகள் முழுவதும் சிதறி காணப்படுகின்றன. இதனால் குளத்து பகுதிக்கு தண்ணீர் செல்லும் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளால் தேங்கி காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்று பரவும் அபாய சூழல் உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட நிர்வாகம் வந்து பார்வையிட்டு அந்தப் பகுதியில் ஒரு குப்பைத்தொட்டி வைத்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story