தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் போதைப் பொருள் குறித்து கலந்தாய் கூட்டம்

X

ஆட்சியரக கூட்டரங்கில் போதைப் பொருள் குறித்து கலந்தாய் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்படுத்தலுக்கு எதிரான வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்ததாவது, கடந்த (08.04.2025) அன்று அரசு தலைமைச் செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளி ஆய்வுக்கூட்டத்தில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையினரால் கைப்பற்றுகை செய்யப்பட்ட தடை விவாதிக்கப்பட்டது. செய்யப்பட்ட போதை பொருட்கள் குறித்தும் மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்பாடு குறித்து சுய விவரமின்றி புகார் அளித்திட தமிழக அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட DRUG FREE TN மொபைல் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வுகூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், உதவி ஆணையர்(கலால்)திரு.ராமச்சந்திரன், நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு அலுவலர்)திருமதி.சசி தீபா, வருவாய் கோட்டாட்சியர் (சங்கரன்கோவில்) கவிதா மற்றும் தென்காசி மாவட்ட அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து போதைப் பொருள் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story