மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது!

X

கே.வி.குப்பம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார், கடந்த 6ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கவசம்பட்டு பாலாற்றில் நின்று கொண்டிருந்த வேனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக தப்பி ஓடிய நபர்களை தேடி வந்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சரவணன் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story