பழமை வாய்ந்த பெரிய ஆஞ்சநேயர் கோயில் மகா கும்பாபிஷேகம்.


ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் நூதன விமான கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே கோ பூஜை, வாஸ்து யாமம், கலசங்கள் ஸ்தாபனம், மகாபூர்ண ஹாதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணி வேந்தன் மற்றும் திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய செயலாளருமான கே.வி.சேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவானந்தம், எதிரொலி மணியன், களம்பூர் பேரூராட்சி மன்ற தலைவர் கே.டி.ஆர்.பழனி, துணைத் தலைவர் அகமது பாஷா, பேரூர் செயலாளர். வெங்கடேசன், இளைஞர் அணி மணிபாரதி, தகவல் தொழில்நுட்ப அணி சுரேந்தர் ஆலய நிர்வாகிகள் சிவலிங்கம், சரஸ்வதி குமார், அசோக் டாக்டர், ஞானமணி மற்றும் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போளூர், களம்பூர், ஆரணி, கஸ்தம்பாடி, வடமதிமங்கலம், கேளூர், சந்தவாசல், கண்ணமங்கலம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story