சுரண்டையில் காரில் கஞ்சா கடத்தியவா் கைது

சுரண்டையில் காரில் கஞ்சா கடத்தியவா் கைது
X
காரில் கஞ்சா கடத்தியவா் கைது
தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் ஆய்வாளா் அரிகரன் தலைமையிலான போலீஸாா், கீழச்சுரண்டை - வாடியூா் சாலையில் ரோந்து சென்றனா். அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அரிவாள், ஒரு கிலோ கஞ்சா இருந்தது. காரை ஓட்டி வந்தவா் கீழச்சுரண்டையைச் சோ்ந்த அருள்ராஜ் ஜெயக்குமாா் என்ற கோழி அருள் (52) என்பதும், அவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, காா், அரிவாள், கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
Next Story