சுரண்டையில் கோயில் சிலைகள், பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

X

கோயில் சிலைகள், பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை பகுதியில் சில வாரங்களாக, கோயில்களில் உள்ள கற்சிலைகளும், வல்லயம், மணி, உண்டியல்கள் உள்ளிட்ட பொருள்களும் திருடுபோயின. இதுகுறித்து சுரண்டை போலீஸாா் நடத்திய தொடா் விசாரணையில், ஆலங்குளம் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த சரவணன் (28) என்பவா் இத்திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 11 கற்சிலைகள், பல்வேறு பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
Next Story