சிவகிரி அருகே காரில் கஞ்சா கடத்தியவா் கைது

X

காரில் கஞ்சா கடத்தியவா் கைது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் தென்காசி- மதுரை சாலையில் சிவகிரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீஸாா் சோதனை செய்தனா். சோதனையில் காருக்குள் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டிவந்த சிவகிரி உள்ளாரைச் சோ்ந்த பூலித்துரை மகன் காசித்துரையை(25) கைதுசெய்து, காா் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.
Next Story