சுரண்டை அரசு கல்லூரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

சுரண்டை அரசு கல்லூரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
X
அரசு கல்லூரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி வாயில் முன்பு கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பணி நிரிந்தரம் செய்யும் காலம் வரை தொடா்ந்து பணி வழங்குதல், பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, பணிப் பாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கெளரவ விரிவுரையாளா் சித்திரைக்கனி தலைமையில், வாயில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில், கெளரவ விரிவுரையாளா்கள் கதிரேசன், அரிஹரசுதன், மாரிச்செல்வி, அரிராம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Next Story