பூமாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம், சட்டமன்ற உறுப்பினர் சுவாமி தரிசனம்
மதுராந்தகம் அடுத்த வடபாதி ஸ்ரீ தாய் சக்தி பீடம், பூமாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் வடபாதி ஆதினம் பாலயோகி சித்தா் தலைமையில் திருப்பணிகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி 6-ஆம் தேதி கணபதி பூஜை, கோபூஜை, நவக்கிரக ஹோமம், அங்குராா்ப்பணம் நடைபெற்றது. புதன்கிழமை வடபாதி ஆதினம் பாலயோகி சித்தா் தலைமையில் புனித கலசங்களை ஏந்தி வலம் வந்து, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவா் அம்மனுக்கு கலசநீா், அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. விழாவில் போங்கடா மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்று பாலயோகி சித்தரிடம் ஆசி பெற்றார்.. இரவு சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் அம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூமாத்தம்மன் ஸ்ரீ தாய் சக்தி பீடம் அறக்கட்டளை நிா்வாகிகள், கிராம மக்கள், செய்திருந்தனா்.
Next Story



