விளையாட்டு போட்டிகளில் வெற்றி

X
கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் விடுதியில் தங்கி பயிலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கலை திருவிழாவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

