அரசு கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

X
மதுரை மாவட்டம் மேலூரில் அரசு கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி வாயிலில் நேற்று (ஏப்.9) ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் படிப்படியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிபாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும். பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி ( EPF )பிடித்தம் செய்திடல் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் கலந்து கொண்டனர்.
Next Story

