பாஜகவினரின் பரபரப்பு போஸ்டர்கள்

மதுரை திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் பாஜகவினர் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்
மதுரை திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களில் நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கூறியதை தொடர்ந்து தமிழக எம்பிக்கள் வக்பு வாரிய மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஆகிய நான்கு பேரின் புகைப்படத்தை ஒட்டி மசோதாவிற்கு எதிராக வாக்களித்த தேசத் துரோகிகள் என பரபரப்பு போஸ்டர் ஒட்டி உள்ளனர். பாஜகவினரின் இந்த போஸ்டரால் பொதுமக்கள் இடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்
Next Story