பங்குனி உத்திரம் விழாவையொட்டி

பங்குனி உத்திரம் விழாவையொட்டி
X
சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் திருக்கல்யாண உற்சவம்
சேலம் ஜங்ஷன் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 7-ந் திருநாளான நேற்று காலை கோமாதா பூஜை, சங்காபிஷேகம், சிறப்பு ஹோமம், பூஜை, தீபாராதனை நடந்தது. திருக்கல்யாண முருகன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பகல் 12 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வருதல், திருமாங்கல்ய தாரணம், சோடஷ உபசார பூஜை நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத்தில் சாமி புறப்பாடு, சோடஷ உபசார பூஜை நடந்தது. இரவு 7.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.
Next Story