காவேரிப்பாக்கம்:புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

X

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதுரை மற்றும் போலீசார், பஜார் வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். பெருமாள் கோவில் உள்ள பெட்டிக்கடையில் போலீசார் தீடீர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையில் இருந்த 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர் சத்யமூர்த்தி (வயது 44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story