பனப்பாக்கத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்!


பனப்பாக்கத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்!
பனப்பாக்கம் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதனை அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பதுக்கிவைத்து, இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோக்கள் மூலம் அதனை திருமால்பூர் மற்றும் பாணாவரம் ரயில் நிலையம் வழியாக கடத்துவதாக பறக்கும் படை தாசில்தார் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு 8 மணிக்கு பனப்பாக்கம் பேரூராட் சிக்கு உட்பட்ட நல்லூர்பேட்டை பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரவி, நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் வினோத் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் வெங்கடேசன், முருகன், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமணன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியில் உள்ள சில வீடுகளில் ரேஷன் அரிசியை வாங்கி அதனை மூட்டைகளில் கட்டி வைத்திருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, 21 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வாலாஜாவில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story