கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலி

X
திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் ரோட்டில் பள்ளிபாளையத்தை அடுத்த ஐந்து பனை பகுதியை சேர்ந்த இளைஞர் பிரதீப் கருவேப்பம் பட்டியில் மாரியம்மன் திருவிழாவுக்கு நண்பர்களுடன் சென்று விட்டு நண்பர்களை கல்லூரியில் இறக்கி விட வந்தவர் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்று முன்னாள் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் சென்று கொண்டிருந்த திம்ம ராவுத்தன்பட்டி மேட்டுப்பாளையம் சடைய கவுண்டன் பாளையத்தை சேர்ந்த கந்தசாமி நல்லம்மாள் என்பவர்களது ஒரே மகன் நவீன் குமார் ட்ரில்லராக வேலை பார்த்து வரும் நவீன் குமார் 25 என்பவரது டிவிஎஸ் எக்ஸ்எல்வாகனத்தின் மீது மோதியதில் 300 அடி துயரம் தூக்கி வீசப்பட்ட நவீன் குமார் டிரான்ஸ்பார்மரில் மண்டை மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிர் இழப்பு. சடைய கவுண்டம்பாளையத்திற்கு செல்ல நாமக்கல் ரோட்டில் டிவி எக்ஸ்எல்வாகனத்தில் நவீன் குமார் வேலுசாமி முதலியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் வாகனத்தின் மீது வேகமாக எக்ஸ் எல் வாகனத்தின்மீது மோதியது.இதில் நிலை தடுமாறிய கார் சாலையோரம் இருந்த டிரான்ஸ் பார்மரில் மோதி நின்றது.கார் மோதி தூக்கி வீசப்பட்ட வேலுசாமி டிரான்ஸ்பார்மரில்மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் மோதியதில் டிரான்ஸ்பார்மர் உடைந்துபோனதில் மின்தடை ஏற்பட்டது சம்பவத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்த போது காரில்பிரதீப் உடன் வந்த ரசீத்என்ற கல்லூரி மாணவன் மற்றும் மற்றும் அவருடைய 2 நண்பர்கள் இறங்கி ஓடிவிட காரை ஓட்டி வந்த இளைஞர் பிரதீப்பை மட்டும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு மின்வாரியத் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். டிரான்ஸ்பார்மரில் தொங்கிக் கொண்டிருந்த நவீன் குமார் உடலை மீட்டுபோலீசார் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த பிரதீப்பை திருச்செங்கோடு போலீசார் பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர் திருவிழாவுக்கு சென்று விட்டு வந்தவர்கள் குடிபோதையில் இருந்து காரை தாறுமாறாக ஓட்டி வந்தார்களா அல்லது என்ன காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இறந்து போன நவீன் குமார் கந்தசாமி நல்லம்மாள் தம்பதியினரின் ஒரே மகன் என்பது தெரியவந்துள்ளது மகனை இழந்து பெற்றோர்கள் கதறி அழுத காட்சி காண்பவர்களை மனதை உருக்குவதாக இருந்தது
Next Story

