குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
நாகை மாவட்டம் ஈகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில், திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஏப்ரல் கூல் என்ற தலைப்பில் 2 -ம் கட்ட குறுங்காடு அமைக்கும் பணி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்லம்மாள் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார். குருக்கத்தி மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2 - ம் கட்ட மரக்கன்று நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தில் சுமார் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதற்கட்டமாக, 100 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் சுரேஷ்குமார் மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அனைவருக்கும் நெகிழி விழிப்புணர்வை முன்னிட்டு காகிதப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் சந்தோஷ் காட்சன் ஐசக் செய்திருந்தார்.
Next Story



