சாலையில் குப்பைகள் வீச்சு; போலீஸ் விசாரணை

X
நித்திரவிளை அருகே தெருவு முக்கு - வைக்கல்லூர் சாலையில் ராமவர்மன் புதுத்தெரு பகுதியில் சாலையோரம் பொதுமக்கள் கொட்டக்கூடிய குப்பைகள் குவிந்து காணப்பட்டது. இதை அள்ளி செல்ல வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள ஒருவர் கொல்லங்கோடு நகராட்சி தூய்மை காவலர்களிடம் கூறியுள்ளார். அதே வேளையில் நகராட்சி தூய்மை காவலர்கள் குப்பையை அள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் இன்று காலை சுமார் 7 மணியளவில் குப்பையை சாலையில் இழுத்து போட்டுள்ளார். சாலையில் வீசிய குப்பையில் கண்ணாடி துண்டுகள், பிளாஸ்டிக் கவர் கிடந்ததால் அந்த பகுதி வழியாக நடந்து சென்ற பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பெரிதாக அவதிக்கு உள்ளாகினர். இது சம்பந்தமான தகவலின் பேரில் நித்திரவிளை போலீசார் சம்பந்தப்பட்ட நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

