பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

X
குமரி மாவட்டம் விரி கோடு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (56). விவசாயியான இவர் சம்பவ தினம் தனது பைக்கில் பழையகடை என்ற பகுதியில் இருந்து மாமூட்டு கடை என்ற பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு பைக்கில் வந்த நெட்டியான் விளையை சேர்ந்த ஹாரிஸ் (25) என்பவர் சாலையை கடக்க முயன்ற நேரம் இருவரின் பைக்குகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு தலையில் பரத்த காயம் ஏற்பட்டது. ஹாரிஸும் காயமடைந்தார். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் , ராமகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். ஹாரிஸுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமகிருஷ்ணனின் மகன் ராஜேஷ் (25) என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பைக்கை அஜாக்கிரதையாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக ஹாரிஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

