ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.

ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஆரணி, ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆரணி அருகே போளூர் வட்டத்தைச் சேர்ந்த களம்பூர் பேரூராட்சியில் அருள்மிகு ஸ்ரீவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் சாலையோரத்தில் இருந்தது. சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றதால் சிறிது பின்புறமாக புதியதாக வீரஞ்சநேயர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி முடிக்கப்பட்டு புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜை, வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம், கலசங்கள் ஸ்தாபனம், புண்யாஹவாசனம், கும்ப ஆராதனம், விஸ்வரூபம், யாத்ராதானம், தசதானம், கும்ப புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. பின்னர் கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.எதிரொலிமணியன், கே.வி.சேகரன், ஆர். சிவானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அனைவரையும் கோயில் நிர்வாகிகள் களம்பூர் பேரூராட்சி மன்ற தலைவர் கே.டி.ஆர்.பழனி, திமுக நகர செயலாளர் வெங்கடேசன், நகரத் துணைச் செயலாளர் டாக்டர் ஞானமணி, பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.எச்.அஹமத் பாஷா ஆகியோர் வரவேற்றனர். இதில் களம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். .
Next Story