விசாலாட்சி உடனுறை விருப்பாச்சி ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

X
ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விருப்பாச்சி ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் யாக மேடைகள் அமைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து மூன்று கால சிறப்பு பூஜைகள் நடந்தது பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை மங்கள வாத்தியங்கள் மற்றும் சிவன் வாத்தியங்களுடன் கோவில் வளம் வந்து முகப்பு கோபுரம் கருவறை கோபுரம் அம்மன் கோபுரம் மற்றும் பரிவார சாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது தொடர்ந்து சாமிகளுக்கு மகா அபிஷேகமும் மகா அலங்காரம் மகாதீபாரதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கோவிலை சுற்றிலும் ஆங்காங்கே அன்னதானம் வழங்கினர் மாலையில் பக்தி சொற்பொழிவு இன்னிசை நிகழ்ச்சி சாமி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது தொடர்ந்து சாமி தெரு வீதி உலாவும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் விழா குழுவினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்
Next Story

