நாகை வட்டார அளவிலான கூட்டமைப்பு பயிற்சி

X
நாகை வட்டார அளவிலான கூட்டமைப்பு பயிற்சி முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் பயிற்சி நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்ட பயிற்சி, பாப்பா கோயில் ஊராட்சியில், கிராம சேவை மையம் அலுவலகத்தில் 4 நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்கள் சண்முகவடிவு மற்றும் ராஜ்குமார் தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தார். தெய்வமணி முன்னிலை வகித்து, மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார். இதில், செயல்முறை விளக்கம், சுயஉதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு, நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தனி நபர் தேவை, குடும்ப தேவை (ம) கிராமத்தின் தேவை கொண்டு காரணிகள், 6 பரிமாணங்கள் கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு, சமூக மேம்பாடு, மறுசீரமைப்பு தேர்வு செய்யும் முறை நேரடியாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியில், இரண்டு நாட்கள் 2 ஊராட்சிகள் களப்பயணமாக ஒரத்தூர் மற்றும் மகாதானம் சென்று வந்தனர். முடிவில், மகாதானம் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர் அனுசுயா நன்றி கூறினர்.
Next Story

