பள்ளப்பட்டி கோஸா ஸ்கூல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வானில் சிறகடித்து பறந்த புறாக்கள்.
பள்ளப்பட்டி கோஸா ஸ்கூல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வானில் சிறகடித்து பறந்த புறாக்கள். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிலர் தங்களது வீடு மட்டும் தோட்ட பகுதியில் புறாக்களை வளர்த்து வருகின்றனர். இவர்கள் ஒன்றுகூடி நேற்று பள்ளப்பட்டியில் உள்ள கோஸா மைதானத்தில் புறா போட்டி நடத்தினர். இந்த போட்டியில் 10க்கும் மேற்பட்டோர் தங்கள் வளர்த்து வந்த புறாக்களை போட்டியில் பங்கேற்க செய்தனர். புறாக்களை வானில் பறக்க விட்டு பின்னர் புறாக்கள் வட்டமடித்து பறப்பதை ரசித்த அர்கள், போட்டியில் பங்கேற்ற புறாக்கள் அதிக நேரம் யாருடைய புறாக்கள் பறக்கிறது என்பதை கவனித்தனர். இதனால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு தங்கள் புறா வெற்றி பெற வேண்டும் என உற்சாக படுத்தும் வகையில் சங்கேத மொழிகளில் தங்களது புறாக்களுக்கு உத்தரவிட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற புறாவின் சார்பில் புறாவை வளர்த்தவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Next Story





