அமர நந்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் பங்குனி மாத திருத்தேரோட்டம்
நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 12 சிவாலயங்களில் ஒன்றான, 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜலாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 2 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக, பாரா வாரா தரங்க நடனத்துடன் சிறப்பு மலர் அலங்காரத்தில், தியாகராஜ சுவாமி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார். அப்போது, சுவாமிகளுக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், தேரினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நகராட்சி தலைவர் மாரிமுத்து மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, விநாயகர், முருகப்பெருமான் தேர்கள் முன்னே செல்ல, அங்கு, தியாகேசா... ஆரூரா.. என பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரினை நான்கு ரத வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story




