அரியலூரில் கோடைகால நீர் மோர் பந்தலை தொடக்கி வைத்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

அரியலூரில்  கோடைகால நீர் மோர் பந்தலை தொடக்கி வைத்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்
X
அரியலூரில் திமுக சார்பில் நகரில் மூன்று இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தலை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர், ஏப்.10- அரியலூரில் நகர திமுக மற்றும் மாவட்ட பொறியாளர் அணி, ஒன்றிய திமுக சார்பில் மூன்று இடங்களில் கோடைகாலத்தில் வெப்பத்தினை தணிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அரியலூர் நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் மாவட்ட பொறியாளர் அணி சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல், அரியலூர் புறவழிச்சாலையில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் ஆகிய மூன்று இடங்களில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திறந்து வைத்து பொது மக்களுக்கு பழங்கள் நீர் மோர் வழங்கினார். இளநீர், வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி மற்றும் பானகம் நீர் மோர் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story