போலி லாட்டரி சீட்டு விற்ற மூவர் கைது

X
Komarapalayam King 24x7 |10 April 2025 2:56 PM ISTகுமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.ஐ. நடராஜன் ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பஸ் ஸ்டாண்ட், ஆனங்கூர் பிரிவு டீக்கடை ஆகிய பகுதியில் போலி லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்று மாலை 01:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், வெள்ளை தாள்களில் நம்பர்கள் எழுதி, போலி லாட்டரி விற்ற சசிகுமார், 39, இளங்கோ, 47, சவுந்தரராஜன், 39, ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்து, நம்பர்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் தலா 5 பறிமுதல் செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
