அரசு பேருந்தில் ஜன்னல் தகடு பெயர்ந்து இருப்பதால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு தடம் எண்:டி34 அரசு பேருந்து தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து வாயிலாக தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரத்திற்கு சென்று வருகின்றனர். அதேபோல, காஞ்சிபுரத்தில் இருந்தும், உத்திரமேரூருக்கு அதிகமான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த பேருந்தில் உள்ள படிக்கட்டுக்கு முன்னும் பின்னும், ஜன்னலை மூடியப்படி தகடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது, பேருந்தில் உள்ள தகடு ஒன்று பெயர்ந்த நிலையில் உள்ளது. பேருந்தில் ஜன்னல் தகடு பெயர்ந்து இருப்பதால், எதிரே வரும் வாகனங்களை தகடு சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும், பேருந்து செல்லும்போது தகடு பெயர்ந்து, அருகே செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பேருந்தில் பெயர்ந்து உள்ள ஜன்னல் தகட்டை அகற்ற, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

