கோவை: சோமனூரில் மாளியம்மன் கோயில் திருவிழா !

கோவை அருகேயுள்ள சோமனூரில் எழுந்தருளியுள்ள செல்வ விநாயகர் மற்றும் மாளியம்மன், சுப்பிரமணியர் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது.
கோவை அருகேயுள்ள சோமனூரில் எழுந்தருளியுள்ள செல்வ விநாயகர் மற்றும் மாளியம்மன், சுப்பிரமணியர் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 1-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 7-ம் தேதி விநாயகர் பொங்கலும், கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 2 மணியளவில் அம்மன் அழைத்தல் மற்றும் ஆபரணம் எடுத்தல் போன்ற சம்பிரதாயங்கள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7 மணியளவில் மாவிளக்கு பூஜை, மகா தீபாராதனை, பூவோடு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பக்தர்கள் முன்னிலையில் பக்திப்பூர்வமாக அரங்கேறின. பின்னர் இரவு 8 மணியளவில் கம்பம் கங்கையில் சேர்க்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை மஞ்சள் நீராட்டு விழாவும், அபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையுடன் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இனிதே நிறைவு பெற்றது. திரளான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story