காவிரி ஆற்றின் பழைய பாலம் பழுது

X
Komarapalayam King 24x7 |10 April 2025 3:48 PM ISTகுமாரபாளையம் மற்றும் பவானி செல்லும் காவிரி ஆற்றின் பழைய பாலம், மிகவும் பழுதாகி உள்ளது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பவானி செல்லும் காவிரி ஆற்றின் பழைய பாலம், மிகவும் பழுதாகி உள்ளது. இதன் பக்கவாட்டு சுவர், கைப்பிடி சுவர் ஆகியவை விரிசல் விழுந்து, பெயர்ந்து விழுந்த நிலையில் உள்ளது. இதில் பல ஆண்டுகளாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆட்டோ, கார் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பாலம் இருக்கும் நிலையில் தற்போது, இது கூட செல்வது ஆபத்தாக உள்ளது. எந்நேரமும் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளதால், பாலத்தை பராமரிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
