திமுக இளைஞரணி அறிமுக கூட்டம்

திமுக இளைஞரணி அறிமுக கூட்டம்
X
திமுக இளைஞரணி அறிமுக கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கொங்கு சமுதாய கூட்டத்தில் நடந்தது கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி தலைமை வகித்தார்.மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி அனைவரையும் வரவேற்றார். திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு கட்சியின் வரலாறு, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புப் படி இருநூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வதற்கு இளைஞர் அணியினர் ஆற்ற வேண்டிய பணிகள் என்னென்ன சமூக வலைதளங்களில்இளைஞர் அணி பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறினார். கூட்டத்தில் சமூக வலைதள பயிற்சியாளர் இளமாறன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஜெகதீஷ் கார்த்திகேயன் கதிரவன், பூக்கடை சுந்தர், ராஜா, முரளி, நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, திருச்செங்கோடு நகரக் கழகச் செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், மல்லசமுத்திரம் பேரூர் கழகச் செயலாளர் திருமலை, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், செல்வராஜ், பள்ளிபாளையம் நகர செயலாளர் குமார், குமாரபாளையம் நகர செயலாளர் நகர் மன்ற தலைவர் விஜய் கண்ணன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ மத்திய ஒன்றிய செயலாளர் தளபதி செல்வம், ஆகியோர் உள்ளிட்டஒன்றிய நகர பேரூர் கழக இளைஞர் அணிஅமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் என இருநூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story