கோவை: போதகர் ஜான் ஜெபராஜுக்கு லுக் அவுட் நோட்டீஸ் !

X
போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல போதகர் ஜான் ஜெபராஜ் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க, கோவை மாநகர போலீசார் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இந்த நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மனைவியை பிரிந்து வாழும் ஜான் ஜெபராஜ், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் கோவை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே சர்ச்சுக்கு வரும் பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த புதிய புகார் காரணமாக அவரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் தீவிரமாக தேடி வருகின்றன. தலைமறைவாக உள்ள அவர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக கருதிய போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்துள்ளனர். இதன் மூலம் அவர் எந்த விமான நிலையத்தின் வழியாகவும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள போதகரை விரைவில் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Next Story

