கலைமகள் நகரில் மதுவுக்கு அடிமையான கணவனை திட்டிய மனைவி.தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்.
கலைமகள் நகரில் மதுவுக்கு அடிமையான கணவனை திட்டிய மனைவி.தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன். கரூர் மாவட்டம் வெண்ணைமலை அருகே உள்ள கலைமகள் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் வயது 48 சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்த இவர் அண்மைக்காலமாக மதுவுக்கு அடிமையாகி வந்தார். இவரது மனைவி அண்ணமுத்து வயது 45. தனது கணவன் மது குடித்து வரும்போது எல்லாம் அன்னமுத்து கண்டித்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி காலை 8:30 மணி அளவில், மீண்டும் மது அருந்தி வந்த முருகனைப் பார்த்து அவரது மனைவி அண்ண முத்து திட்டி உள்ளார். இதனால் மணமடைந்த முருகன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தாருடன் தனது கணவனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சிடைந்த அண்ணமுத்து, இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த முருகனின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story




