சுதந்திரப் போராட்டத் தியாகி பி சீனிவாச ராவ் பிறந்தநாள் அரசு சார்பில் மரியாதை.

திருத்துறைப்பூண்டியில் மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பி .சீனிவாச ராவ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பி சீனிவாச ராவ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்  மறைந்த சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவ் அவர்களின் 118வது பிறந்த தினத்தினை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது அரசு நினைவு மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் நாகை எம்பி வை. செல்வராஜ் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் நகராட்சி ஆணையர் துர்கா உள்ளிட்ட அரசு அலுவலர்களும் மரியாதை செய்தனர் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி உலகநாதன் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story