சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

X
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, பி கோமதி, கே.பி.ஜோதிபாசு, சி ஐ டி யு மாவட்ட செயலாளர் மாலதி, மாவட்ட குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் திருவாரூர் நகரக் குழு நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Next Story

